கேள்விகள் மற்றும் பதில்கள்

இது சஃபாரி எக்ஸ்டேன்ஷன், இது சஃபாரிக்கு உள்ளே மட்டுமே விளம்பரங்களைத் தடுக்கும், மற்ற உலாவிகள், செயலிகள் அல்லது விளையாட்டுகளுக்கு உள்ளே அல்ல. முடிந்தால் இணையப் பதிப்பைப் பயன்படுத்தவும் (f.e. சஃபாரியில் youtube.com-ஐத் திறக்கவும்).

சஃபாரி சில நேரங்களில் புதுப்பித்தபிறகு ஃபில்டர்களை மீண்டும் ஏற்றாது. செயலின் எக்ஸ்டேன்ஷன்கள் இன்னும் அமைப்புகளில் இயக்கப்பட்டிருக்கிறதா எனச் சரிபார்த்து, சஃபாரியை கட்டாயமாக மீண்டும் தொடங்கவும் (வெளியேறி மீண்டும் திறக்கவும்).

இல்லை. செயலி ஆப்பிளின் அதிகாரப்பூர்வ உள்ளடக்கத் தடுப்பு API-ஐப் பயன்படுத்துகிறது - இது உங்கள் உலாவல் தகவல்களை அணுகாமல் சஃபாரிக்கு தடுக்கும் விதிகளின் பட்டியலை வழங்குகிறது.

ஆப்பிள் ஒரு எக்ஸ்டேஷனை 50,000 தடுப்பு விதிகளாகக் கட்டுப்படுத்துகிறது - துரதிர்ஷ்டவசமாக நவீன ஆட் பிளாக்கருக்கு இது போதாது. அவற்றை 6 எக்ஸ்டேஷன்களாகர் பிரிப்பது சஃபாரிக்கு 300,000 விதிகள்வரை வழங்க செயலியைஅனுமதிக்கிறது.

iOS/iPadOS -ல் முகவரி புலத்தின் இடதுபுறத்தில் உள்ள 'aA' பட்டனைத் தட்டி, தற்காலிகமாகத் தடுப்பதை இடைநிறுத்த 'Turn off Content Blockers' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அதே மெனுவில், நிரந்தரமாகத் தடுப்பதை முடக்க, 'Website Settings'என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Use Content Blockers' என்பதை முடக்கலாம்.

MacOS-ல் முகவரி புலத்தின் வலது புறத்தில் உள்ள ரீஃப்ரெஷ் பட்டனை ரைட் கிளிக் செய்து, தற்காலிகமாகத் தடுப்பதை இடைநிறுத்த 'Turn off Content Blockers' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

முகவரி புலத்தில் ரைட் கிளிக் செய்து, 'Website Settings' என்பதைத் தேர்ந்தெடுத்து நிரந்தரமாகத் தடுப்பதை முடக்க 'Enable Content Blockers' என்பதை முடக்கவும்.

iOS/iPadOS:
முகவரி புலத்தின் இடது புறத்தில் உள்ள 'aA' பட்டனைத் தட்டவும். 'Website Settings' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Use Content Blockers' என்பதை முடக்கவும்.
பட்டியலைப் பார்க்கவும் நிர்வகிக்கவும், Settings > Safari > Content Blockers என்பதற்குச் செல்லவும்.

macOS:
முகவரி புலத்தில் வலது கிளிக் செய்து, 'Website Settings' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Enable Content Blockers' என்பதில் தேர்வை நீக்கவும்.
பட்டியலைப் பார்க்கவும் நிர்வகிக்கவும், Safari > Preferences > Websites > Content Blockers என்பதற்குச் செல்லவும்.

1. Adblock Pro என்பது Settings > Safari > Content Blockers (iOS) அல்லது Safari Preferences > Extensions (macOS) என்பதில் இயக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்

2. Adblock Pro-வைத் தொடங்கி, முதல் டேப்பில் பரிந்துரைக்கப்பட்ட விருப்பத்தேர்வுகளை இயக்கவும்.

3. உங்கள் வைட்லிஸ்டைச் சரிபார்த்து தடைநீக்கப்பட்ட இணையதளத்திற்கான நுழைவு உள்ளதா எனப் பார்க்கவும்.

அது உதவவில்லை என்றால், உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கி மேலே உள்ள வழிமுறைகளை மீண்டும் செய்யவும். ஒரு பக்கம் மட்டுமில்லாமல் பல இணையதளங்களை முயற்சிக்கவும். நீங்கள் இன்னும் பிரச்சனையாக இருந்தால், தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

செயலி பதிப்பு 6.5 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு மற்றும் iOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் மற்றும் macOS Catalina (10.15) அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே ஒத்திசைவு ஆதரிக்கப்படும். ஒத்திசைவுக்கு பொதுவாக ஒரு நிமிடம்வரை ஆகலாம். ஒத்திசைவு சிக்கியதாகத் தோன்றினால், சில நேரங்களில் செயலியை மீண்டும் தொடங்குவதன் மூலம் அதைச் சரிசெய்யலாம்.

ஒவ்வொரு இணையதளத்திற்கும் அமைப்புகளை எளிதாகச் சரிசெய்ய, செயலியின் செயல் பட்டனை சஃபாரியில் சேர்க்கலாம். IOS/iPadOS-ல் சஃபாரியில் ஷேர் பட்டனைத் தட்டி, கீழே ஸ்கிரால் செய்து, 'Edit Actions...' என்பதைத் தட்டி, AdBlock Pro-வை பட்டியலில் சேர்க்கவும்.

ஜாவாஸ்கிரிப்ட் என்பது இணையதளங்களை ஊடாடுமாறு செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு மொழியாகும். ஆனால் இதைச் சில நேரங்களில் விளம்பரங்களை நுழைக்க அல்லது ஆன்லைனில் உங்களைக் கண்காணிக்க பயன்படுத்தலாம். அதை முடக்குவது பெரும்பாலும் அதை நிறுத்தும், ஆனால் இது வலைத்தள செயல்பாட்டையும் நிறபத்தக்கூடும்.

Top